அவளின்
அப்பா இறந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிப்போயிருந்தது. அந்த டியூசன் வகுப்பில் நாங்கள்
இணைந்து ஆறு மாதங்கள் ஆகியிருப்பினும், ஒரே பள்ளியில் வெவ்வேறு வகுப்பில் படித்திருப்பினும்
எனக்கு அது தெரியாமலே போனது ஆச்சரியம்தான். எப்பொழுதும் அவள் உட்கார்ந்திருக்கும் அந்த
மூன்றாவது மூலை இன்று ஏனோ காலியாகயிருந்தது. எப்பொழுதும் எனக்கு முன்னதாகவந்து எனது
தாமதத்தை கண்கள் வழியாக கோபமாக, எப்போதும் குறிப்பறிவிப்பவள் இன்று இன்னும் வரவில்லை.
முதலியார் தெரு நண்டு கும்பல், விச்சு கும்பல் வழக்கத்திற்கு மாறாக விரைவிலேயே வந்திருந்தது.
ஆனால் அவளையும் அவளின் கும்பலையும் மட்டும் காணவில்லை. இன்னும் நாற்றமடிக்காத அந்த
கொசு ஃபேக்டரியின் கதவுகள் திறக்கப்படவில்லை. வாசற்கதவின் முனைகள் முதல் அறையோடு முட்டப்படவில்லை.
கும்பல்கள் டீச்சரால் திட்டல்வாங்க ஆரம்பிக்கப்படவுமில்லை. சரியாக அவளை மட்டும் விட்டுவிட்டு
அவளின் கும்பல் அல்லது எங்கள் அக்கிரஹாரத்து டீச்சர் செல்லமாய் அழைக்கும் அந்த வானரப்
படை வந்து சேர்ந்தது. அவள் இல்லாததால் அந்த மூன்றாவது மூலையின் முனை இப்போது அவளின்
தோழி கனிக்குச் சொந்தமானது. ஆனால்
June 7, 2013
March 27, 2013
ப்ராக்கு
இருபெரும் கண்மாய்களுக்கு ஊடே ஊரின் ஓரக்காலில் பனைமரங்களைச்
சூழ்ந்து நிற்கும் முத்தரசன் அரசு நடுநிலைப்பள்ளி, மதியத்திற்கு பிறகு கரைச்சலெடுத்துக்கொண்டிருந்தது.
எட்டாம் வகுப்பின் கடைசி
பாடவேளைப்பிரிவு கணக்கு வாத்தியார் உள்ளே வர மாணவர்கள் அவரவருக்கு உரிய இடத்தில் வந்து
அமர்ந்து கொண்டனர்.
‘வார வியாழக்கிழமை நம்ம ஸ்கூல்ல இருந்து ராமேஸ்வரம் ரெண்டு நாள் டூர் போறோம், ஏற்கனவே தெரிஞ்சுருக்குமுன்னு நெனக்கிறேன் .வர்றவுங்க புதன்
கிழமைக்குள்ள எரநூற்வா குடுத்து பேர் குடுத்துருங்க .நா ஹெட் மாஸ்டர் ரூம் வரைக்கும் போயிட்டு வறேன். அதுவரைக்கும்
சத்தம்போடாம அமைதியா இருங்க‘.
அவர் புறப்பட்ட அடுத்த நொடி வகுப்பறையே தலைகீழானது போல் ஒரே ஆட்டம் பாட்டமாக இருந்தது. கட்டிப்போட்டு வைத்திருந்த ஆட்டுக்குட்டியை அவிழ்த்து
விட்டாற்போல்
Labels:
சிறுகதை,
செல்வக்குமார் பிச்சை
March 5, 2013
இரும்பு
நல்ல இரவு. எங்கள் வீட்டிற்கு வெளியே இருந்த சாக்கடைக்குச்
செல்லும் பொந்திலிருந்து , நடுங்கியபடி எட்டிப் பார்க்கிறேன் நான். எனது அப்பாவும்,
அம்மாவும், நண்பர்களும் கூப்பிடும் தூரத்தில் தான் நின்று கொண்டிருக்கிறார்கள். ஆனால்
குரல் எழவில்லை. திடீரென ஒரு கரு வெள்ளம். கருத்த, கொழுத்த பெரிய பெரிய பூனைகளின் படை
என் மீது பாய்ந்தது. கத்துவதற்குக் கூட அவகாசம் கொடுக்காமல் என்னை பற்களால் இழுத்து
வெளியே போட்டன. அவை அனைத்தும்
Labels:
சிறுகதை,
முத்துவேல் ஜனகராஜன்
February 18, 2013
வண்ணங்களை நிர்ணயிக்கும் சில்லறைகள்
அய்யப்பன்தாங்கல் பணிமனை தகரக்கூரையின் வழிவந்தடையும் சூரிய
வெப்பத்தின் சூடும், வியர்வையின் எரிச்சலும் காலை மணி ஏழு முப்பதென்று தெளிவாய் சொன்னது.
நான், எனக்கு அடுத்து எண்.166, அதற்கு அடுத்து எண்.17m, அதற்கும் அடுத்து எண்.37g. எனக்கான பேருந்து எண்.11h. இன்னும் வரவில்லை. இதில் 166 தவிர மற்ற இரண்டும் பச்சை போர்டுகள். 166 டீலக்ஸ் பேருந்து. நீங்கள் தினசரி பேருந்தில் பயணம் செய்பவராக இருந்தால் இந்த டீலக்ஸ், பச்சை, வெள்ளை போர்டுகளின் வேறுபாடுகளை அறிந்திருக்கலாம். இவை பயணச் சுமையையோ, வேகத்தையோ எந்தக் காலத்திலும் வேறுபடுத்திக் காட்டியது கிடையாது. இவை கட்டணங்களை வெவ்வேறு வழிகளில் உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்டவை. இது தவிர ஏசி பேருந்தும் உண்டு. அதில் நான் ஏறியதே கிடையாது என்பதால் அதைப் பற்றி
சொல்லத் தேவையில்லை. நான் பணிபுரியும் ஏரியாவின் அம்மன் கோவில் நிறுத்தத்தை
Labels:
சிறுகதை,
சூரிய பிரதமன்
January 21, 2013
காட்சியின் கொடை - மாரி செல்வராஜ்
அன்பின் நண்பர்களுக்கு,
ஆழ் மனதறிந்த எண்ணங்களுக்கு மென்ரகசிய வண்ணங்கள் தீட்டி மாயம் செய்யும் நம் பிரியமிகு எழுத்தாளர் வண்ணதாசன் அவர்கள் எழுதிய முன்னுரையில் இருந்து...
"எனக்கு இப்போது செல்வத்தை தெரியாது. மாரிசெல்வராஜை மட்டுமே தெரியும். கொல்லப்படாதவர்களை தெரிந்துகொள்வது, கொல்லப்பட்டவர்களை தெரிந்துகொள்வதற்குத்தான். நான் தெரிந்துகொண்டேன் நீங்களும் தெரிந்துகொள்வீர்கள்.........."
தெரிந்து கொள்ள செல்லுங்கள் நடந்து கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியில் வம்சி பதிப்பகத்தின் அங்காடி எண்: 465 மற்றும் 466க்கு. நம் காட்சி இணைய இலக்கிய தளத்தின் வீச்சுக்கு ஒரு மாரி செல்வராஜ் சாட்சி. இந்த வருட புத்தக திருவிழாவில் இவரது முதல் சிறுகதை தொகுப்பான “தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்” வம்சி பதிப்பாக வெளிவருகிறது. விலை ரூ.150/-
“தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்” சிறுகதை தொகுப்பிற்கு நம் இயக்குநர் ராம் அவர்கள் எழுதிய முன்னுரையிலிருந்து..............
”நகரங்களில் வாழ்ந்த எனக்கு கிராமத்தின் விதிகள் அகப்படுவதாய் இல்லை. நான் வாழ்ந்த நகரங்களில் நீ என்ன சாதி என்று யாரும் கேட்டது இல்லை. யோசித்து பார்க்கையில் நகரம் கிராமத்தை காட்டிலும் பத்திரமானது என்று தோன்றியது. சென்னையில் யாரும் எங்கும் செல்லலாம், யாரும் யாருக்காகவும் பயப்பட வேண்டியதில்லை. கூவம் அழுக்காய் மலமாய் நாற்றத்தோடு ஓடினாலும் தாமிரபரணியை காட்டிலும் புனிதமானது என்று ஏனோ தோன்றுகிறது”
ஆழ் மனதறிந்த எண்ணங்களுக்கு மென்ரகசிய வண்ணங்கள் தீட்டி மாயம் செய்யும் நம் பிரியமிகு எழுத்தாளர் வண்ணதாசன் அவர்கள் எழுதிய முன்னுரையில் இருந்து...
"எனக்கு இப்போது செல்வத்தை தெரியாது. மாரிசெல்வராஜை மட்டுமே தெரியும். கொல்லப்படாதவர்களை தெரிந்துகொள்வது, கொல்லப்பட்டவர்களை தெரிந்துகொள்வதற்குத்தான். நான் தெரிந்துகொண்டேன் நீங்களும் தெரிந்துகொள்வீர்கள்.........."
தெரிந்து கொள்ள செல்லுங்கள் நடந்து கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியில் வம்சி பதிப்பகத்தின் அங்காடி எண்: 465 மற்றும் 466க்கு. நம் காட்சி இணைய இலக்கிய தளத்தின் வீச்சுக்கு ஒரு மாரி செல்வராஜ் சாட்சி. இந்த வருட புத்தக திருவிழாவில் இவரது முதல் சிறுகதை தொகுப்பான “தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்” வம்சி பதிப்பாக வெளிவருகிறது. விலை ரூ.150/-
Subscribe to:
Posts (Atom)
தொடர்பு
படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com



